திருகோணமலை
77 வருட காலமாக இறக்ககண்டி மண்ணில் கல்வி ஒளி வீசும் ஒற்றைத் தாரகையாக இப்பாடசாலை பயணித்து வந்திருக்கிறது. சவால்களோடும், சாதனைகளோடும் அவ்வப்போது சரிவுகளோடும் நமது கிராமத்து குழந்தைகளுக்கு தாய்மடிபோல அமைந்த அல்-ஹம்றாவை எனது உள்ளம் எப்போதும் நேசிக்கிறது. இப்பாடசாலையின் முன்னேற்றமே எமது சமூகத்தின் எதிர்காலமாகும். ஆகவே, நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற ஓரணியில் நின்று செயலாற்றுவது சமூகக் கடமையாகும். கல்வி,கலை,கலாசார,விழுமியம்,சிறந்த மனப்பாங்கு , திறன்களை இணைப்பாடவிதான மையப்படுத்திய உருவாக்கம் அத்தனையும் அல்-ஹம்ராவே அல்லாஹ்வி ன் உதவியால் உன்னாலே சாத்தியமாகும். மனமுவந்து வாழ்த்துகிறேன்!
தேசிய கொள்கைக்கு மதிப்பளிக்கும் அறிவு, திறன்,மனப்பாங்கு, சமநிலை ஆளுமை கொண்ட நற் பிரஜை
சமகால உலகிற்கு முகம் கொடுக்கக்கூடிய கல்வி, தொழில்நுட்பம், பண்பாட்டு விழுமியங்கள், விட்டுக் கொடுப்புடனான மனப்பாங்கு போன்றவற்றை பெற்ற தியாக சிந்தனையுடைய சமுதாயத்தை அர்ப்பணிப்புடன் உருவாக்குதல்