இல்ல விளையாட்டு போட்டி

Screenshot2025-02-26100022copy.png
Screenshot2025-02-26100022copy.png
  • பாடசாலை ஆரம்பத்தை குறிக்கும் முதல் மணி 7.30 க்கு ஒலிப்பதற்கு முன் முன்னர் மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்;.
  • மாணவர்கள் தமது சீருடை,காலணி,கழுத்து பட்டி என்பவற்றை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சுத்தமாகவும்  நேர்த்தியாகவும் அணிந்து வர வேண்டும்.
  • பாடசாலை சமூகம் தர இயலாமை ஏற்படின் அதற்குரிய காரணத்தை குறிப்பிட்டு அதிபரிடம் முன்னராகவே அனுமதி பெறுதல் வேண்டும்.
  • பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் எவரும் எக்காரணத்திற்காகவும் பாடசாலையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க பட மாட்டார்கள்.நோய், விபத்து இடம்பெறும் வேளைகளில் பெற்றோர் அழைக்கப்பட்டு மாணவர்;கள் ஒப்படைக்கப்படுவார்கள்.
  • பாடசாலை நடைபெற்று கொண்டிருக்கும் போது அதிபர் ஆசிரியரிடம் அனுமதி இல்லாமல் எவரும் வகுப்பறையை விட்டு வெளியே செல்ல கூடாது.
  • பாடசாலையில் நடைபெறும் சகல பரிட்சைகளுக்கும் மாணவர்கள் சமூகமளிக்க வேண்டியது.
  • கட்டாயமாகும்.பரீட்சைகளுக்கு சமூகமளிக்காமல் விட்டால் தகுந்த காரணத்தை ஆதர புர்வமாக சமர்பிக்க வேண்டும்.
    இடைவேளையின் போது மாணவர்கள் சிற்றுண்டிச்சாலை வகுப்பறைகள் பாடசாலை வளாகம் முதலியவை அசுத்தப்படாத வகையில் ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும்.
  • மாணவர்களுக்கு தெரிவிப்பதற்கென தொலைபேசி மூலமாக எந்த தொலைபேசி மூலமாக எந்த செய்தியும் ஏற்றுகொள்ளப்பட மாட்டாது.அத்துடன் தொலைபேசி மூலமாக நேரடியாக மாணவர்களுடன் தொடர்புகொள்ள முடியாது.
  • பாடசாலை கட்டிடங்கள் தளபாடங்கள் ஏனைய பொருட்கள் தம் சொந்த பொருட்கள் போல மாணவர்களால் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • பாடசாலையில் நடைபெறும் விசேட வகுப்புகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பவற்றுக்கு மாணவர்கள் சமுகடளிக்க வேண்டியது கட்டாயமாகும்.அதே நேரம் பாடசாலை வளாகத்தை சுத்தமாக பேணல்.
  • தொடர்ச்சியாக 03 நாட்களுக்கு மேல் சமூகமளிக்காதவர்கள் மருத்துவ சான்றிதழ் சமர்பித்தல் வேண்டும்.
  • ஒழுக்காற்று குழு ஆசிரியர்கள் மேற்பார்வையின் கீழ் மாணவத் தலைவர்களால் தாமதமாக வரும் மாணவர்கள் பதியப்படுவார்கள்.
  • வகுப்பறையைவிட்டு தேவை கருதி வெளியேரும் மாணவர்கள் அனுமதி அட்டை (exit pass) தரித்து வெளியேற வேண்டும்.