பாடசாலையின் வரலாறு
இப்பாடசாலை 1948.02.01ந் திகதி ஆரம்பிக்கப்பட்ட நீண்டகால வரலாற்றினைக் கொண்டது. இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்ற காலங்களில் சில குடும்பங்கள் இக்கிராமத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திரு இராசையா என்பவர் கடமையாற்றியுள்ளார் என்பது சமூகத்தலைவர்களின் தகவல்களின்படி கிடைக்கப் பெற்றுள்ளது. எனினும் 1953ம் அண்டு முதலே சம்பவத்திரட்டுப் புத்தகங்கள் ஆரம்பத் தகவல்களைக் கொண்டுள்ளன. ஆரம்ப பிரிவு பாடசாலையாக இருந்த இப்பாடசாலையிலிருந்து இடைநிலைப் பிரிவுக்காக நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம், தி/அல்-பத்தாஹ் மகா வித்தியாலயம் என்பவற்றை நோக்கி மாணவர்கள் சென்றுள்ளனர். எனினும் 1990ம் ஆண்டு வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்களினூடாக நிலாவெளியைச் சேர்ந்த பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதினூடாகவும், இப்பாடசாலைக்கு அதிபராக இருந்த V.M.கஸ்ஸாலி அவர்களது முயற்சியினாலும் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் முதற் தடவையாக 1992ம் ஆண்டு க.பொ.த (சா/தர) பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அதிபரின் முயற்சியால் 1996ம் ஆண்டு 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு க.பொ.த.(உ/தர) கலைப் பிரிவு ஆரம்பிக்கப்ட்டது. 2012.11.14ந் திகதி முதல் இப்பாடசாலைக்கு கடமையேற்ற அதிபர் M.A.சலாகுதீன் அவர்களின் காலத்தில் 2016ம் ஆண்டு பெண்களுக்கான பாடசாலையாகவும், அயலில் காணப்பாடும் காணியில் ஆண்களுக்கு தனிப்பட்ட சமூகத்தினரின் ஒத்துழைப்புடன் உருவானது அதனைத் தொடர்ந்து "அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" (NSBS) திட்டத்தின் கீழ் B பிரிவில் 2016ம் ஆண்டு உள்வாங்கப்பட்டு பௌதிக வளத் தேவைகள் பலவற்றினைப் பூரத்திசெய்து சமூகத்திற்கு சிறந்த நற்பிரஜைகளை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பது இப்பாடசாலையின் சுருக்க வரலாறாகும்.
நன்றி
பள்ளியின் முதல் விளையாட்டுப் போட்டி

பள்ளியின் முதல் உயர்தர மாணவர் பிரியாவிடை






